தீக்குளித்து தற்கொலை: பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி


தீக்குளித்து தற்கொலை: பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி
x
தினத்தந்தி 10 May 2022 8:41 PM GMT (Updated: 10 May 2022 8:41 PM GMT)

தீக்குளித்து தற்கொலை: பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி.

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி வீடுகளை இடித்து அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி கண்ணையா ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உடனிருந்தார்.

இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமிநகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது நீர்நிலை பகுதி இல்லை. நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், கோயம்பேடு பஸ் நிலையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பல இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களை தான் முதலில் உடனே இடிக்க வேண்டும்.

தமிழக அரசு இந்த இடத்திலேயே உள்ள மக்களுக்கு வீடு இங்கேயே கட்டி கொடுக்க வேண்டும். உயிரிழந்த கண்ணையா குடும்பத்துக்கு, தமிழக அரசு கொடுத்த ரூ.10 லட்சம் போதாது. ரூ.1 கோடியும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story