மதுரை: அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை,
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மேரியாட் ஓட்டலில் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவவிநாயகம், சுதாகர் ரெட்டி, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், துணை தலைவர் ஜெயவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், இளைஞரணி செயலாளர் பாரிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மதுரையில் உள்ள பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜனதா ஆலோசனை கூட்டத்தின் மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரங்கிற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story