சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை...!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து உள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது இது குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் சென்னையின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்தனர்.
இந்த நிலையில இதுபோன்று இன்றும் சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது உள்ளது.
Related Tags :
Next Story