கோவை: ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்....!
கோவையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் கோவை பெரிய கடை வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, பவிழம் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
15 டன் பறிமுதல்
இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயன பொடி மூலம் பழுக்க வைத்த சுமார் 12½ டன் மாம்பழம் மற்றும் 2½ டன் சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
மேலும் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழம், சாத்துக்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story