ரேசன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி


ரேசன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
x
தினத்தந்தி 11 May 2022 11:42 PM IST (Updated: 11 May 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அகவிலைப்படியை பொருத்த அளவில் அது பொதுவான விஷயம்தான். விலைவாசிக்கு உயர்வது போல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல ரேசன் கடை ஊழியர்களுக்கு உயர்த்த வேண்டும். கண்டிப்பாக உயர்த்தலாம்.

நகைக்கடன் தள்ளுபடியில் இதுவரைக்கும் வந்துள்ள புகார்களின் அடிப்படையில் முழுமையாக நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும். 

ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story