போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர்


போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர்
x
தினத்தந்தி 12 May 2022 10:43 AM GMT (Updated: 12 May 2022 10:43 AM GMT)

8 % ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோாிக்கை விடுத்தனா். 5% வரை ஊதிய ஊயா்வு வழங்க அரசு தயராக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13- வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14 வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. சென்னை, குரோம் பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது: -
போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். 

 8 %  ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோாிக்கை விடுத்தனா்.  5% வரை ஊதிய ஊயா்வு வழங்க அரசு தயாா்.  இதுகுறித்து நிதித்துறை அதிகாாிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும். பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மகளிா் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுாியும் தொழிலாளா்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 


Next Story