சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்


சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் விருதுகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 12 May 2022 4:07 PM GMT (Updated: 12 May 2022 4:07 PM GMT)

சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு வருங்காலங்களில் 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

உலக செவிலியர் தினத்தை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு எதிர்காலத்தில் விளக்கேந்திய மங்கை என்று பெயர்பெற்ற 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டுக்குமான விருதுகள் அந்த நிகழ்ச்சியில் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

Next Story