சொத்து தகராறில் தந்தை அடித்து கொலை - முன்னாள் பேரூராட்சி தலைவி கைது...!


சொத்து தகராறில் தந்தை அடித்து கொலை - முன்னாள் பேரூராட்சி தலைவி கைது...!
x
தினத்தந்தி 13 May 2022 3:18 AM GMT (Updated: 13 May 2022 3:42 AM GMT)

தென்காசி அருகே தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பேரூராட்சி தலைவி கைது செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி,

தென்காசி அருகே உள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). சொத்து தகராறில் இவர் கடந்த 4-ந் தேதி அவருக்கு சொந்தமான தோப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கோட்டை மாடனின் மூத்த மகள் மைதீன் பாத்து என்பவரின் கணவர் பரமசிவன், கடைசி மகள் ஸ்ரீதேவி மற்றும் வசந்தகுமார், மகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேகர் என்பவரை தேடி வந்தனர்.

முன்னாள் பேரூராட்சி தலைவி

இந்த நிலையில் கொலை தொடர்பாக குற்றாலம் போலீசார் நேற்று காலையில் கோட்டை மாடனின் மூத்த மகள் மைதீன் பாத்து (57) என்பவரை கைது செய்தனர். இவரது கணவர் பரமசிவன், கோட்டை மாடனை கொலை செய்யப்போவதாக மைதீன் பாத்துவிடம் கூறியுள்ளார். அதனை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக மைதீன் பாத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மைதீன் பாத்து அ.தி.மு.க. சார்பில் இலஞ்சி பேரூராட்சி முன்னாள் தலைவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story