அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து - கல்லூரி மாணவர் உயிரிழப்பு...!


அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து - கல்லூரி மாணவர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 13 May 2022 10:10 AM IST (Updated: 13 May 2022 10:10 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன் (வயது 22). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கபிலன் இன்று காலை வழக்கம் போல் இன்று வீட்டில் இருந்து தனது காரில் கல்லூரிக்கு செல்வதற்காக செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது காலை 7 மணியளவில் திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் காரின் மீது நேருக்குநேர் மோதியது.  இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கழுகுன்றம் போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story