அசானி புயல் - நெல்லையில் 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!


அசானி புயல் - நெல்லையில் 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!
x
தினத்தந்தி 13 May 2022 5:28 AM GMT (Updated: 13 May 2022 5:28 AM GMT)

அசானி புயல் காரணமாக நெல்லையில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

வள்ளியூர்,

தமிழகத்தில் அசானி புயல் காரணமாக தென் வங்காள விரிகுடா மற்றும் கன்னியாகுமரி கடலில் பலத்த காற்று வீசுவதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

தமிழகத்தில் அசானி புயல் காரணமாக தமிழக கடலோர பகுதி, தென் வங்காள விரிகுடா மற்றும் கன்னியாகுமரி கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதன்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட பத்து கடற்கரை கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு இன்று இரண்டாவது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் நாட்டு படகுகள் அனைத்து கடற்கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story