தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2022 5:36 PM GMT (Updated: 13 May 2022 5:36 PM GMT)

பாகூரை அடுத்த சேலியமேடு பேட்யில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூரை அடுத்த சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (40). சேகர் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று குடிப்பதற்கு மனைவியிடம் சேகர் பணம் கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன்பின் ரேவதி கூலி வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த சேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story