மலைவாழ் மாணவ-மாணவிகளுக்கு குரூப் தேர்வு பயிற்சி முகாம்


மலைவாழ் மாணவ-மாணவிகளுக்கு குரூப் தேர்வு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 14 May 2022 4:20 AM GMT (Updated: 14 May 2022 4:20 AM GMT)

மலைவாழ் மாணவ-மாணவிகள் குரூப் தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி  மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் நக்சலைட் சிறப்பு பிரிவு சார்பாக மலைவாழ் மாணவ, மாணவிகளுக்கு குரூப் போட்டித் தேர்வுக்கு பயிற்சி முகாம், ஆலோசனைகள் மற்றும் ஊக்கப்படுத்தி வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். கொடைக்கானல் குற்றவியல் நடுவர் கார்த்திக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். 

இதில் நக்சல் சிறப்பு பிரிவு போலீசார் தாண்டிக்குடி மலைப் பகுதியில் உள்ள மலைவாழ் மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Next Story