கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!


கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!
x
தினத்தந்தி 14 May 2022 10:13 AM IST (Updated: 14 May 2022 10:13 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் சேர்ந்த 22 வயது இளம் பெண் தனது  தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்குள் நள்ளிரவில் சென்ற மர்மநபர் இளம் பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.  இதுகுறித்து அந்த பெண் குன்றத்தூர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார்.

 சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ்(19)  என்பது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், வண்டலூர் - மீஞ்சூர்  சாலையில் வைத்து சதீசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார்  நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
 
சதீஷ் அதேபகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார். மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பதால் அந்த வீட்டை குறித்து விசாரித்துள்ளார். 

அந்த வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர் சம்பவத்தன்று கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். 

தனது அக்கா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து அந்த பெண் கதவை திறந்தவுடன் பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார். மேலும் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார்.  தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

கஞ்சா போதையில் அங்கேயே படுத்து உறங்கி விட்டு தனக்கு இரண்டு நாட்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும்,  இதனை வெளியே சொல்ல கூடாது எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளான். 

மேலும் போலீசார் சதீஷை கைது செய்யும்போது தப்பியோட முயன்றதில் ஒரு கை, காலில் எலும்பு முறிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story