அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கு பதவி உயர்வு


அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கு பதவி உயர்வு
x

புதுவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவி உயர்வு ஆணை வழங்கினார்.

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்கு ஊழியர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 பேர் இளநிலை எழுத்தர்களாகவும், 4 பேர் வரவேற்பாளர்கள் மற்றும் எழுத்தர்களாகவும் உதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பதவி உயர்வு பெற்றவர்களுக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், மருத்துவமனை இயக்குனர் உதயசங்கர், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம், கணக்கு அதிகாரி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story