முதல் அமைச்சர் நினைத்தால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும் - கவிஞர் வைரமுத்து


முதல் அமைச்சர் நினைத்தால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும் - கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 15 May 2022 10:18 AM GMT (Updated: 15 May 2022 10:18 AM GMT)

முதல் அமைச்சர் நினைத்தால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் பேரன் அரவிந்த் ராஜ் - பிரியதர்சினியின் திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கு பெற்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, முதல் அமைச்சரின் எளிமையைப் பற்றி சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த விழாவிற்கு வந்திருப்பதே அவருடைய எளிமைதான், அன்புதான். முதல் அமைச்சர் நினைத்திருந்தால் அதானியோடு, அம்பானியோடு உணவருந்தலாம். பில்கேட்ஸோடு அமர்ந்து சாப்பிட முடியும். எலான் மஸ்க்கோடு அவர் உணவருந்தலாம். அந்த உயரத்தில் அவர் இருக்கிறார். 

ஆனால் அவர் உணவருந்த தேர்ந்தெடுத்தது ஒரு நரிக்குறவரின் வீடு என்பதே, இவர் தரையிலிருந்து மக்களைப் பார்க்கிறார். தரையிலிருந்து இந்த மண்ணை நேசிக்கிறார். மண்ணிலிருந்து இந்த உலகத்தை காண ஆசைப்படுகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று கூறினார்.

Next Story