நீலகிரி டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அமல்


நீலகிரி டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அமல்
x
தினத்தந்தி 15 May 2022 7:25 PM GMT (Updated: 15 May 2022 7:25 PM GMT)

காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பாட்டில்களில், ‘ஈசி 10’ (Easy 10) என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story