சென்னையில் கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...!


சென்னையில் கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...!
x
தினத்தந்தி 16 May 2022 8:02 AM GMT (Updated: 16 May 2022 8:10 AM GMT)

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநாளன்று மலர் கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் ஜூன் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் மிகப்பெரிய மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

அந்தவகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரையிலான 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்த கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மலர் கண்காட்சி

இந்த மலர் கண்காட்சியில் புனே, பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.

மேலும் கருணாநிதியின் உருவத்தில் மலர் அலங்காரம் இடம்பெறுகிறது. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவான தேவையான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் முதன்முறையாக

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். சென்னையில் முதன்முறையாக அரசு சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


Next Story