12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு!


12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 17 May 2022 9:02 AM GMT (Updated: 17 May 2022 9:02 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையில் குவியல் குவியலாக பிட் பேப்பர்களை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை,

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்வுகள் அனைத்தும் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்று மிக முக்கிய தேர்வுகளான கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் குவியல் குவியலாக பிட் பேப்பர்களை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவை அடுத்து அதிகாரிகள் அங்குள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று சோதனை செய்ததில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட தேர்வுகளில் விடை குறிப்புகள் அடங்கிய துண்டு பேப்பர்கள் குவியல் குவியலாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து அங்கிருந்த துண்டு பேப்பர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருப்பினும், இதுபோன்ற பல பிட் பேப்பர்கள் அங்குள்ள பல பள்ளிகளுக்கு சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் கேள்வித்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என்ற தகவலை அதிகாரிகள் கூறினர். குறிப்பிட்ட கேள்விகள் கேட்கப்படலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மாணவர்கள் ஒருசில விடைகளை இவ்வாறு பிட் பேப்பர்களாக தேர்வு செய்திருக்கலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது பிட் பேப்பர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடையில் கிடைக்கப்பட்ட பிட் பேப்பர்களை வைத்து மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்களாக என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெராக்ஸ் கடையில் குவியல் குவியலாக பிட் பேப்பர்கள் கண்டுபிடிக்கப்பப்ட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story