தேதியை சொன்னால் கிழமையை சொல்லும் அதிசய திறமை கொண்ட 5வயது சிறுவன்


தேதியை சொன்னால் கிழமையை சொல்லும் அதிசய திறமை கொண்ட 5வயது சிறுவன்
x
தினத்தந்தி 17 May 2022 2:50 PM IST (Updated: 17 May 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

தேதியை சொன்னால், கிழமை உள்ளிட்ட காலண்டர் விவரங்களை சொல்லும் வேலூரை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


வேலூர்,

வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் - சங்கீத பிரியா தம்பதியரின் மகன் ரக்ஷன். 5 வயது மட்டுமே நிரம்பிய இவ்விறுவனிடம் ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட்டு கேட்டால், அந்த தேதி என்ன கிழமையில் வருகிறது என்பதை சரியாக கூறுகிறான். 

அச்சிறுவனை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சிறுவனுக்கு இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டினார். 

1 More update

Next Story