மதுரையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள 1,000 மெட்ரிக் டன் அரிசி - மாவட்ட கலெக்டர் ஆய்வு


மதுரையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள 1,000 மெட்ரிக் டன் அரிசி - மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2022 4:03 PM IST (Updated: 17 May 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள அரிசியின் தரம், அளவு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.

மதுரை,

பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த வகையில் மதுரையில் இருந்து 12 அரிசி ஆலைகளில் இருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்நிலையில் மதுரையில் இன்று அரிசி ஆலைகளில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் நேரில் ஆய்வு செய்தார். இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள அரிசியின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த அரிசி மூட்டைகளை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story