நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை எச்சரிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 May 2022 7:41 PM IST (Updated: 17 May 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

சென்னை,

கேரளாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவைக்கு கன முதல் மிக கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

கோவை, திருப்பூர், தேனி. திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 


Next Story