பெட்ரோல், டீசல் வி்லை உயர்வு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் - டி.ஆர்.பாலு எம்.பி


பெட்ரோல், டீசல் வி்லை உயர்வு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் - டி.ஆர்.பாலு எம்.பி
x
தினத்தந்தி 18 May 2022 1:02 AM IST (Updated: 18 May 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் வி்லை உயர்வுக்கான காரணம் குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயார் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளியில் தி.மு.க. சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை உலகம் பாராட்டுகிறது. ஆட்சி திறமைக்கு அடித்தளமாக சிந்தாமல் சிதறாமல் கூட்டணிகளை அப்படியே வைத்திருக்கும் திறமை ஆளுமை மு.க. ஸ்டாலினிடம் உள்ளது.

திராவிட மாடலுக்கு அடிப்படை மாநில சுயாட்சி. மாநில சுயாட்சியுடன் சமூக நீதி சேர்ந்தால் அது தான் திராவிட மாடல் என்பது. மாநில சுயாட்சி இல்லாததால் தான் நீட் தேர்வு எழுத வேண்டி உள்ளது. 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை ரத்து செய்துள்ளோம். 13 ஆயிரம் கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி உள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம்  குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார். 

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story