"2023 ரத்தக் கசிவோடு பிறக்கும்; ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துங்கள்" - கவிஞர் வைரமுத்து டுவீட்
ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. இந்த சூழலில் உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்
2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.