4-ம் மண்டல பாசனத்திற்கு 20-ந்தேதி தண்ணீர் திறப்பு


4-ம் மண்டல பாசனத்திற்கு 20-ந்தேதி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு 20-ந் தேதி தண்ணீர் திறக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி


திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு 20-ந் தேதி தண்ணீர் திறக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


ஆலோசனை கூட்டம்


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் திருமூர்த்தி அணைக்கு தற்போது பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.


இதற்கிடையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு தலைமை பொறியாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


20-ந்தேதி தண்ணீர் திறப்பு


கூட்டத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு தொகுப்பு அணைகளில் உள்ள நீர்இருப்பு மற்றும் எதிர்பார்க்கும் நீர்வரத்து ஆகியவை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற 20-ந்தேதி முதல் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், உயிர் தண்ணீராக ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்பட உள்ளது.


மேலும் கூடுதலாக மழை பெய்து தண்ணீர் வந்தால் அதற்கு ஏற்ப கூடுதல் சுற்று தண்ணீர் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் எதிர்வரும் முதல் மண்டல பாசனத்திற்கும், 4 மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கியது போன்று தண்ணீர் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


1 More update

Next Story