21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு


21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு
x

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆவடி உள்பட 6 மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்களை நியமித்தும் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவரம் வருமாறு:-

1. நெல்லை மாநகராட்சி கமிஷனர் பி.விஷ்ணுசந்திரன், நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. கடலூர் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்சித்சிங் கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

3. கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்து வந்த விஜயலட்சுமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக பொறுப்பேற்கிறார்.

4. மதுரை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கே.பி.கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேரன்மகாதேவி சப்-கலெக்டர்

5. தேனி பெரியகுளம் சப்-கலெக்டர் சி.ஏ.ரிஷாப், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக பொறுப்பேற்கிறார்.

6. தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஏ.சங்கர், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்பதிவாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

7. உயர்கல்வித்துறை இணை செயலாளர் எஸ்.பி.கார்த்திகா, சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம்

9. இ-நிர்வாகத்தின் இணை இயக்குனர் எஸ்.பாலச்சந்தர், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குனர் எஸ்.சரவணன், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

11. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எம்.அருணா, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

12. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை கமிஷனர் எம்.தங்கவேல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர், திட்ட இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

புதிய கமிஷனர்கள் நியமனம்

13. ஊட்டி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் மோனிகா ரானா, ஊட்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தேயிலை வளர்ப்போர் தொழில் கூட்டுறவு மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் (இன்ட்கோசர்வ்) மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

14. சேலம் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக இருந்து வரும் கே.சாந்தி, சேலம் ஸ்டார்ச் மற்றும் சவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கத்தின் (சாகோசர்வ்) நிர்வாக இயக்குனராக முழு கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

15. பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை கமிஷனர் (தெற்கு) சிம்ரன்ஜீத்சிங் காலொன், மதுரை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.

16. திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர், திட்ட அதிகாரி எம்.பிரதாப், கோவை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி கமிஷனர் தர்பகராஜ்

17. தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர், திட்ட அதிகாரி ஆர்.வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

18. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியில் மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர், திட்ட இயக்குனர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி நெல்லை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.

19. கோவை வணிக வரிகள் துறை இணை கமிஷனர் (மாநில வரிகள்) ஆனந்த்மோகன், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. மாநில இணை நெறிமுறை (புரோட்டாகால்) அதிகாரியாக இருந்த தர்பகராஜ், ஆவடி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.

21. கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்காரா, சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் துறை நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story