கடந்த 6 நாட்களில் 21 பேர் அதிரடி கைது


கடந்த 6 நாட்களில் 21 பேர் அதிரடி கைது
x

கடந்த 6 நாட்களில் 21 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஆபரேஷன் 'கஞ்சா வேட்டை 4.0' என்ற பெயரில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையை கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 15 நாட்கள் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் வகையில் திருச்சி மாநகர போலீ்ஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் திருச்சி மாநகரத்தில் கடந்த 6 நாட்களில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இதில் பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்ததாக 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 4¾ கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story