வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்


வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சென்னை

வடசென்னை அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள அலகுகள் முழுவதிலும் 5 வருடத்துக்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதல் யூனிட் 3-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 45 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இவ்வாறு அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story