காசி மீதான மேலும் 2 வழக்குகளில் 2,100 பக்க குற்ற பத்திரிகை


காசி மீதான மேலும் 2 வழக்குகளில் 2,100 பக்க குற்ற பத்திரிகை
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் காசி தொடர்பான மேலும் 2 வழக்குகளில் 2,100 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் காசி தொடர்பான மேலும் 2 வழக்குகளில் 2,100 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாகர்கோவில் காசி

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கந்துவட்டி வழக்கு ஒன்றும் அவர் மீது பாய்ந்தது.

அந்த வகையில் காசி மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் காசிக்கு உதவியதாக அவரது நண்பர் ஒருவரையும், காசியின் தந்தை தங்க பாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் காசிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை

காசி மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகள் நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. ஒரு வழக்கு போக்சோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது. இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்கு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காசியை நீதிபதி குற்றவாளி என அறிவித்து, அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் 2 வழக்குகளில் குற்ற பத்திரிகை...

காசி மீதான பாலியல் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ள மேலும் 5 வழக்குகளை துரிதமாக முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் விசாரணை தற்போது நடக்கிறது.

இதற்கிடையே காசி மீதான மேலும் 2 பாலியல் வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி அந்த 2 வழக்குகள் ெதாடா்பான குற்றபத்திாிகையில் இதுவரை மொத்தம் 2,100 பக்கங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை கோர்ட்டில் தாக்க செய்ய இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.


Next Story