சோழவந்தான் அருகே வேனில் கடத்திய 217 கிலோ கஞ்சா பறிமுதல்-டிரைவர் உள்பட 2 பேர் கைது


சோழவந்தான் அருகே வேனில் கடத்திய 217 கிலோ கஞ்சா பறிமுதல்-டிரைவர் உள்பட 2 பேர் கைது
x

சோழவந்தான் அருகே வேனில் கடத்திய 217 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் வேனில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் விக்கிரமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அந்த வேனில் மீன் பார்சல் செய்யக்கூடிய தெர்மாகோல் பெட்டிகளில் 217 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த டிரைவர் அகமது (வயது27) மற்றும் விக்கிரமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார்(44) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய வேனையும், கஞ்வையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story