விவேகானந்தர் மண்டபத்தை 21,700 பேர் பார்த்தனர்


விவேகானந்தர் மண்டபத்தை 21,700 பேர் பார்த்தனர்
x

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 21,700 பேர் பார்த்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 21,700 பேர் பார்த்தனர்.

விவேகானந்தர் மண்டபம்

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி கேரளாவில் இருந்து கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்து மகிழ்ந்தனர். கடந்த 3 நாட்களில் 21 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். அதாவது 28-ந்தேதி 7 ஆயிரத்து 200 பேரும், நேற்று முன்தினம் 8 ஆயிரம் பேரும், நேற்று 6 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர்.

1 மணி நேரம் தாமதம்

இந்த நிலையில் நேற்று கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக காலை ஒரு மணி நேரம் தாமதமாக படகு சேவை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து, கடல் அழகை ரசித்தனர்.


Next Story