2,265 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


2,265 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

பெரியநாயக்கன்பாளையத்தில் 2,265 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

இடிகரை,

பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். காரில் வந்தவவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும், தப்பியோடியது சிகாபுதீன், தாஜுதீன் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் காரமடை பொன்விழா நகரில் வாடகைக்கு வீட்டில் தங்கி இருந்து தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் 2,265 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அப்பாசை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story