தஞ்சை மாவட்டத்தில் 2,308 வரைவு வாக்குச்சாவடிகள் உள்ளன


தஞ்சை மாவட்டத்தில் 2,308 வரைவு வாக்குச்சாவடிகள் உள்ளன
x

தஞ்சை மாவட்டத்தில் 2,308 வாக்குச்சாவடிகள் உள்ளன என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் 2,308 வாக்குச்சாவடிகள் உள்ளன என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2024 சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்றுகாலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதியில் ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறத்தில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 13 பாகங்களின் அமைவிடங்களும், 24 பாகங்களின் கட்டிடங்களும் மாற்றியமைக்கப்பட்டது. கும்பகோணம் சட்டசபை தொகுதியில் 7 பாகங்களின் அமைவிடமும், 26 பாகங்களின் கட்டிடங்களும், பாபநாசம் சட்டசபை தொகுதியில் 2 பாகங்களின் அமைவிடங்களும், 18 பாகங்களின் கட்டிடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.திருவையாறு சட்டசபை தொகுதியில் 5 பாகங்களின் அமைவிடங்களும், 4 பாகங்களின் கட்டிடங்கள் மாற்றியமைக்கப்பட்டும் 2 வாக்குச்சாவடி மையம் புதிதாகவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சட்டசபை தொகுதியில் 4 பாகங்களின் அமைவிடங்களும், 3 பாகங்களின் கட்டிடங்களும், 6 பாகங்களின் பெயர்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2,308 வாக்குச்சாவடிகள்

ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் 5 பாகங்களின் அமைவிடங்களும், 29 பாகங்களின் கட்டிடங்களும், 5 பாகங்களின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டு ஒரே ஒரு வாக்குச்சாவடி மையம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 8 பாகங்களின் கட்டிடங்களும், பேராவூரணி சட்டசபை தொகுதியில் 21 பாகங்களின் கட்டிடங்களும், ஒரு பாகத்தின் பெயரும் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டதில் மொத்தமாக 2,305 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டதில் திருவையாறு சட்டசபை தொகுதியில் புதியதாக 2 வாக்குச்சாவடிகளும், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,308 ஆக உயர்ந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் இறுதிப்படுத்தப்பட்டு இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சை), பூர்ணிமா (கும்பகோணம்), அக்பர்அலி (பட்டுக்கோட்டை), தேர்தல் தாசில்தார் அழகேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story