முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Jan 2024 7:16 AM GMT (Updated: 19 Jan 2024 7:36 AM GMT)

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வருகிற 28-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story