நாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் செத்தன


நாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் செத்தன

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கண்டாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 55). இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கண்டாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு கிடந்த ஆடுகளை கடித்து குதறியதில் 20 குட்டிகள் உள்பட 24 ஆடுகள் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் நாய்களின் உரிமையாளர் நாராயணன் மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் இதே நாய்கள் மாணிக்கம் என்பவரின் ஆட்டுபட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் 8 ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story