பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு..!


பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு..!
x

பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பின்னர் பாகன்களிடம் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி குட்டி யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

இதையடுத்து அங்கிருந்து மசினகுடி இறங்கு தரைத்தளத்தில் தயார் நிலையில் வைக்கப்படும் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு செல்ல உள்ளார். பிரதமர் வருகையையொட்டி முதுமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி 9-ந் தேதி தெப்பக்காடு வருகிறார். இதன் காரணமாக பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story