கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கம்


கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு முடிந்த நிலையில் அரசு பஸ்களிலும் முன்பதிவு முடியும் நிலையில் உள்ளது. எனவே சொந்த அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு வருகிற 21-ந் தேதி முதல் 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பஸ்கள்

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 100 பஸ்களும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்கள் என மொத்தம் 240 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் பயணிகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க சிறப்பு பஸ்கள் அனைத்தும் வெவ்வேறு பஸ் நிலையங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி மதுரை, தேனி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான சிறப்பு பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூர், ஈரோடு செல்லும் பஸ்கள் கோவை மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும், ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் சாய்பாபாகாலனியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும் மேற்கண்ட பஸ் நிலையங்களுக்கு பயணிகள் எளிதில் சென்று வர, காந்திபுரம், உக்கடம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story