குறுந்தொழில் நிறுவனங்களை அடைத்து 25-ந்தேதி போராட்டம்


குறுந்தொழில் நிறுவனங்களை அடைத்து 25-ந்தேதி போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறுந்தொழில் நிறுவனங்களை அடைத்து 25-ந்தேதி போராட்டம்

கோயம்புத்தூர்

கோவை

மின்வினியோகத்தில் "பீக் அவர்ஸ்" கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி குறுந்தொழில்களின் கூட்டமைப்பினர் 25-ந் தேதி தொழில் நிறுவனங்களை அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.

கோவையில் குறுந்தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் ஜேம்ஸ், மற்றும் சிவசண்முக குமார், சுருளிவேல், சவுந்தர குமார் உள்பட 18 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வு

குறு சிறு தொழில் நடத்துபவர்கள் கடந்த 2½ வருடங்களாக கொரோனா தொற்று, மூலபொருள் விலை ஏற்றம் காரணங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இந்த சூழ்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் தொழில்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தினார்கள்.

யூனிட் கட்டணமாக தொழில் துறைக்கு ரூ.1.50 காசு என உயர்த்தப்பட்டது. இதனை தொழில் அமைப்புகள் ஏற்று கொண்டன. ஆனால் எல்.டி-சி.டி (112 கிலோ வாட்) மின்சாரத்தை பயன்படுத்திடும் குறு,சிறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு மின்கட்டணத்தை 60 சதம் முதல் 70 சதம் வரை உயர்த்தி உள்ளனர்.

பீக் அவர்ஸ் கட்டணம்

இந்த நிலையில் தொழில் துறையினர் தமிழக அரசை தொடர்ந்து கேட்டு கொண்டதின் அடிப்படையில் 25 சதமாக இருந்த பீக் அவர்ஸ் கட்டணத்தை 10 சதம் குறைத்து 15 சதமாக மாற்றி உள்ளனர். குறு,சிறு தொழில்களை பொறுத்தவரை மின்சார வாரியம் அறிவித்து உள்ள காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான பீக் அவர்ஸ் கட்டணத்தால் (கூடுதலாக 25 சதவீதம்) குறு, சிறு தொழில்களை முழுமையாக முடக்கி விடும். 112 கிலோ வாட் வரை பயன்படுத்தும் தொழில் முனைவோர்கள் 8 சதவீதம் 10 சதவீதம் கூட லாபம் இல்லாமல் தொழில் செய்து வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு தமிழகத்தின் அடையாளமான குறு, சிறு தொழில்களை அழித்து விடும்.அதுபோல் (112 கிலோ வாட்) வரை மாதம் நிலை கட்டணம் 150 சதத்துக்கு மேல் உயர்த்தி உள்ளது பெரும் அளவில் பாதிக்கும்.

குறுந்தொழில்களை அடைத்து போராட்டம்

இந்த 2 வகையான கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி வருகின்ற 25-ந்தேதி கோவை பவர் ஹவுஸ் டாடாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை உண்ணாவிரதம் இருந்து தமிழக அரசை வலியுறுத்த உள்ளோம். அதுபோல் அன்றைய தினம் தொழில் முனைவோர்கள் ஒருநாள் கதவடைப்பு செய்ய உள்ளார்கள்.

இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story