25 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; வாலிபர் கைது


25 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; வாலிபர் கைது
x

25 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டிருப்பதாக திருமானூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட போலீசார் புதுக்கோட்டை பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள கருவைக்தோப்பில் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிம்சோன் (வயது 28) என்பவர் சாராய ஊறல் போட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 25 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அதற்கு பயன்படுத்திய பானைகளை போலீசார் அழித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிம்சோனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் புதுக்கோட்டை கிராமத்தில் வருகிற 20-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்காக ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.


Next Story