தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு
x

வடகிழக்கு பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாகப் பயிர்கள் வாடியதைத் தொடர்ந்து, 33% மற்றும் அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார் கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


Next Story