குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதி

குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதி
x

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ேமலும் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

27 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவகால மாற்றத்தால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதார துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது வெளி நோயாளி பிரிவில் இன்று (நேற்று) மட்டும் 27 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும், உள்நோயாளிகள் பிரிவில் 17 குழந்தைகள், 8 பெரியவர்கள் என 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்

இதில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளிக்கு சென்றால் அதன் மூலமாக மற்ற குழந்தைகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காய்ச்சல் அதிகரித்து வரும் காரணத்தினால் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகளுக்கு தனிப்பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சலுக்கு என தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள், டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story