வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை


வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
x

ஓசூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை; மாடி வழியாக புகுந்து மர்மநபர்கள் கைவரிசை

கிருஷ்ணகிரி

ஓசூர்:

வியாபாரி

ஓசூர் அருகே காரப்பள்ளி தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ் (வயது 48). காய்கறி வியாபாரியான இவர், பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் கடைக்கு சென்றுவிட்டார். மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மாடிக்கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடி விட்டனர்.

நகை- பணம் கொள்ளை

மாலையில் வீடு திரும்பிய சிவராஜ் குடும்பத்தினர் வீட்டின் மாடிக்கதவு, பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள்,் ரூ.5 லட்சம் ஆகியன கொள்ளை போனதாக கூறினர்.

தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை போலீசார் பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story