மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
மதுரை
மதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் ரிச்சர்ட்சன் (வயது34). இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், பெருங்குடியில் உள்ள வீட்டில் இருந்த அவரது தாயார் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூரு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் பிரின்ஸ் ரிச்சர்ட்சன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story