ரூ.25 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல்
கக்கநல்லா சோதனைச்சாவடியில் ரூ.25 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி
கூடலூர்
தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது 15 கிராம் எடை கொண்ட கோக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த கார்த்திக் (வயது 23) பரத்குமார் (20), ஹைதராபாத்தைச் சேர்ந்த காதிராஜுசந்திப் ஆகியோர் என்பது தெரியவந்தது. மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story