2,550 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2,550 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
புதுக்கடை,
கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2,550 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி வேணுகோபால் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு கீழ்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கூண்டு கட்டிய டெம்போ வேகமாக வந்ததை அதிகாரி தடுத்தார். உடனே வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். அதைத்தொடர்ந்து வாகனத்தில் அதிகாரி சோதனை போட்டார். அப்போது அதில் கேன்களாக இருந்தன. அதை திறந்து பார்த்த போது மானியவிலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் வெள்ளை மண்எண்ணெய் இருந்தது தெரிய வந்தது.
2,550 லிட்டர் மண்எண்ணெய்
அந்த வாகனத்தில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 73 கேன்களில் மொத்தம் 2,550 லிட்டர் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணெயை பறிமுதல் செய்து வள்ளவிளை பகுதியில் உள்ள அரசு மானிய கிட்டங்கியிலும், வாகனத்தை கிள்ளியூர் தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.