ரெயில் மூலம் 2,600 டன் உர மூட்டைகள் வந்தது


ரெயில் மூலம் 2,600 டன் உர மூட்டைகள் வந்தது
x

நெல்லைக்கு ரெயில் மூலம் 2,600 டன் உர மூட்டைகள் வந்தது.

திருநெல்வேலி

மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் டி.ஏ.பி. உர மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 42 ரெயில் பெட்டிகளில் உர மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தன. அந்த சரக்கு ரெயில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் ரெயில் பெட்டிகளில் இருந்து உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றினர். அந்த லாரிகள் மூலம் உர மூட்டைகள் தனியார் நிறுவனங்கள், உரக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.Next Story