மது,கஞ்சா விற்றதாக 28 பேர் கைது


மது,கஞ்சா விற்றதாக 28 பேர் கைது
x

மதுரை நகரில் மது,கஞ்சா விற்றதாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை,

மதுரை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக, மது விற்பனை, கஞ்சா விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திடீர்நகர் பகுதியை சேர்ந்த காஜா மைதீன் (வயது40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா, ரூ.9,740, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோல், திருப்பரங்குன்றம்- அவனியாபுரம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதவிர, விளக்குத்தூண், கீரைத்துறை, அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனை செய்த 26 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story