பணம் வைத்து சூதாடிய 29 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 29 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 29 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 29 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

நெகமத்தை அடுத்த கொண்டேகவுண்டன்பாளையம் முருகன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடப்பது உறுதியானது. இது தொடர்பாக கொண்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து(வயது 65), வீரன்(46), மாரிமுத்து(43), கருப்புசாமி(53), அய்யப்பன்(47), அருளானந்தம்(42), முருகன்(45), தங்கவேல்(63), திருமலைசாமி(50), முருகேசன்(40) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 920 மற்றும் 52 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

இதேேபான்று கொண்டேகவுண்டன்பாளையம் கம்பளத்து நாயக்கன் கோவில் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கும்பலை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நெகமத்தை சேர்ந்த மாரிமுத்து(28), மூலனூரை சேர்ந்த லோகநாதன்(50), ஆறுமுகம்(40), மூர்த்தி(35), சக்திவேல்(41) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 860 மற்றும் 52 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தவிர அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் ரோந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மலைக்கணி மற்றும் போலீசார் பணம் வைத்து சூதாடிய காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரகுமான்(55), சின்ன நெகமத்தை சேர்ந்த முருகேசன்(44), கணக்கம்பட்டியை சேர்ந்த மாணிக்கம்(63), காளியப்பன்பாளையத்தை சேர்ந்த கணேசன்(40) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 460 மற்றும் 52 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story