2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்


2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
x

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நெல்லை ராதாபுரம் தொகுதியில் உள்ள 306 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். உயிரிழந்த பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

செங்கல்பட்டில் ரூ.210 கோடி முதலீட்டில், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில், மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை, தலைமைச்செயலத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.


Next Story