இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு - 18 ஆயிரம் பேர் தேர்ச்சி...!


இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு - 18 ஆயிரம் பேர் தேர்ச்சி...!
x

தமிழக காவல்துறையின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி அதன் பின்னரும் கடந்த 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் 295 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ளது. மோத்தம் 3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதில்,15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவர்.


Next Story