துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 2-ம் கட்டமாக நிதி உதவி


துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 2-ம் கட்டமாக நிதி உதவி
x
தினத்தந்தி 31 May 2023 11:09 PM IST (Updated: 31 May 2023 11:10 PM IST)
t-max-icont-min-icon

துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 2-ம் கட்டமாக நிதி உதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தேரோட்டம் கடந்த 100 ஆண்டுகளாக நடத்தப்படவில்லையாம். தற்போது கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு வருகிறது. புதிய தேர் செய்ய இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில் தேர் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.9 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலையினை பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் வைத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, தர்மகர்த்தா ராஜாங்கம் ஆகியோர் முன்னிலையில் புதிய தேர் செய்யும் ஸ்தபதி மணிகண்டனிடம் வழங்கினார். அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம் உடனிருந்தார். மேலும் தேர் செய்ய பொதுமக்கள், உபயதாரர்கள் தரப்பில் ரூ.20 லட்சம் திரட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தேர் செய்யும் பணிகள் முடிவுற்று வெள்ளோட்டம் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story